சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த 16ம் தேதி முதல் ஆசியாவிலேயே மிகப்பெரிய புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்தப் புத்தகக் கண்காட்சி தொடங்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை 12 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் வந்திருப்பதாகவும் இங்கு 10 லட்சத்திற்கும் மேல் தலைப்புகளில் புத்தகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இன்று புத்தகக் கண்காட்சி நிறைவு பெறுவதால் பல இடங்களிலிருந்து மக்கள் வருவார்கள் எனவும் கூட்டம் அலைமோதும் எனவும் கூறப்படுகிறது.
Post a Comment