தமிழகத்தில் இன்று 23ஆவது மெகா தடுப்பூசி முகாம்..!

இன்று இருபத்தி மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50,000  மையங்களில் நடைபெற உள்ளது. இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் சுமார் 50,000 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் செயல்படுகின்றன.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று 23வது மெகா தடுப்பூசி முகாம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற இருப்பதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதில் சென்னையில் மட்டும் 1600 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பு ஊசி செலுத்தப்படும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post