குமரி மாணவி காமன்வெல்த் போட்டிக்கு தகுதி..!

இந்த மாதம் 22ஆம் தேதி இந்தியா முழுவதும் அனைத்து பல்கலைக்கழகங்களும் இடையே விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இந்தியா முழுவதிலும் உள்ள பல்கலைக்கழக மாணவ மாணவிகளுக்கு இடையேயான இந்த விளையாட்டு போட்டி ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வரில் நடைபெற்றது.

இந்த விளையாட்டுப் போட்டியில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கிரேசினா மெர்லி இன்று இளம்பெண் உயரம் தாண்டுதல் போட்டியில் 1.84 மீட்டர் உயரம் தாண்டி முதலிடத்தை பெற்றுள்ளார். 

இதையடுத்து அவருக்கு சீனாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் லண்டனில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டியிலும் இந்தியா சார்பாக விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post