பள்ளி கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை.. கல்வித்துறை அறிவிப்பு..!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. 

மேலும் வங்கக்கடலில் இன்று உருவாகும் தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை(நவ 10) மற்றும் நாளை மறுநாள்(நவ 11) சில இடங்களில் கனமழையும் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து மழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பண்டிகைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என்பதால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post