ராஜ்குந்த்ரா உடன் விரைவில் விவாகரத்து ஷில்பா செட்டி..!

நடிகை ஷில்பா செட்டி அவரது கணவர் ராஜ் குந்த்ரா உடனான திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த ஜூலை மாதம் ஆபாச படங்களை தயாரித்து விநியோகித்த வழக்கில் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார் ராஜ்குந்த்ரா. இதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக ஆதாரங்கள் வலுவாக இருப்பதால் அவருக்கு தண்டனை கிடைப்பது உறுதி என்று கூறப்பட்டு வருகிறது.

ராஜ் குந்த்ரா அவரை விட்டுப்பிரிய ஷில்பா செட்டி பிரிய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ராஜ்குந்த்ராவை பிரிந்து அவர் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சினைகளும் இல்லாமல் புது வாழ்க்கை தொடங்க நடிகை ஷில்பா செட்டி முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post