பள்ளிக்கு வரவேண்டாம்.. மாணவர்களுக்கு அறிவிப்பு..!

பொள்ளாச்சியில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இரண்டு பேருக்கும், புரவிபாளையம் உயர்நிலைப் பள்ளி மாணவி ஒருவருக்கு பனிக்கம்பட்டியில் தனியார் பள்ளி மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து பள்ளி வளாகம் வகுப்பறைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, கிருமி நாசினி தெளித்து, நோய் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா அறிகுறிகள் இருந்தால் ஆசிரியர்கள் மாணவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது என கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குனரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலமாக 

தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் :

● அரசின் நிலையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பள்ளிகள் செயல்பட வேண்டும்.
● எந்த ஒரு சூழ்நிலையிலும் மாணவர்களின் பாதுகாப்பில் அலட்சியமாக செயல்படக் கூடாது.
● மேலும் காய்ச்சல், இருமல், உடல்வலி உள்பட ஏதேனும் அறிகுறி இருந்தால் ஆசிரியர்கள் மாணவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது.
● அருகில் உள்ள மருத்துவ மையங்களின் பரிசோதனையை செய்து கொள்ளும்படி அவர்களை அறிவுறுத்த வேண்டும்.
● தொற்று இல்லை என்பதை உறுதி செய்து உடல் நலம் தேறிய பின் பள்ளிக்கு வந்தால் போதுமானது.

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post