இல்லத்தரசிகள் மிகவும் சோகம்.. சிலிண்டரின் விலை எகிறியது ?

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் அதிகரித்து ஒரு சிலிண்டர் 900 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு 25 ரூபாய் அதிகரித்துள்ளது இதன் காரணமாக மானியத்துடன் கூடிய சிலிண்டர் ஒன்று 900 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கு முன் ஆகஸ்ட் 17ஆம் தேதி 25 ரூபாய் அதிகரித்து 775 ரூபாய் 50 காசுகளுக்கு சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல பயன்பாட்டிற்கான மானியம் இல்லாத சிலிண்டர் விலை 75 ரூபாய் அதிகரித்து 1,831 ரூபாய் ஐம்பது காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இல்லத்தரசிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. முன்னதாக ஒன்றரை மாதத்திற்கு பின்னர் 25 ரூபாய் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 14 நாட்களில் மீண்டும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இடத்தை வைத்து மாதத்திற்கு இருமுறை சிலிண்டர்களை மாற்றியமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post