கடை ஊழியர்கள் இனி நிற்கத் தேவையில்லை.. சூப்பர் அறிவிப்பு..!

ஊழியர்கள் எப்போதும் இன்று நடை செய்வதினால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் ஊழியர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் சட்ட திருத்த மசோதா ஒன்றை பேரவையில் தாக்கல் செய்தார்.

அதில் தமிழகத்தில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் பெரிய பெரிய ஜவுளி கடைகள் என பெரும்பாலான கடைகளில் பணிபுரியும் ஆண் பெண் பணியாளர்கள் அவர்களது வேலை நேரம் முழுவதும் நின்றபடியே பணிபுரிந்து வருகின்றனர்.

இதனால் பல்வேறு உடல்நல உபாதைகளுக்கு ஆளாகின்றனர். அப்படிப்பட்ட பணியாளர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் உட்கார இருக்கை வசதி வழங்குதல் அவசியம் மாநில தொழிலாளர் ஆலோசனை குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இதனால் கடைகளில் பணிபுரியும் இளம் வயது ஆண்கள் , பெண்கள் மற்றும் முதியவர்கள் தங்களது பணி நேரம் முழுவதும் நின்று கொண்டே இருக்க வேண்டிய நிலை ஏற்படுவதன் காரணமாக பல்வேறு உடல் உபாதைகளையும் சந்தித்து வந்தனர் கால் வலியால் அவதிப்படும் சூழலும் அதனால் மன உளைச்சல்களும் அவதிப்பட்டனர்.

இந்த சட்ட மசோதா தொழிலாளர்களிடம் மட்டுமல்ல அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இருக்கை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டிய கட்டாயமும் உருவாகியுள்ளது.

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post