மேலும் ஒரு மாணவி தற்கொலை நீட் மரணம்..!

காட்பாடியை அடுத்த தலையாரம்பட்டு கிராமத்தை சேர்ந்த மாணவி சௌந்தர்யா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். நீட் தேர்வு எழுதிய பின் இரண்டு நாள்களாக மாணவி விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. மதிப்பெண் குறைந்து விடும் என்ற பயத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டார் என தெரியவந்துள்ளது.

காட்பாடி அருகே உள்ள தலையாரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் திருநாவுக்கரசு ருக்குமணி தம்பதியர். இவர்களது மகள் சௌந்தர்யா வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள அரசினர் பெண்கள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்ற சௌந்தர்யா பொதுத்தேர்வில் 600க்கு 510 மதிப்பெண் பெற்று கடந்த செப்டம்பர் 12 அன்று காட்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் நீட் மருத்துவ நுழைவு தேர்வு எழுதினார்.

தேர்வு எழுதிய மூன்று நாட்கள் ஆன நிலையில் தேர்வில் மதிப்பெண் குறைவாகப் பெற்று விடுவோமோ என்ற அச்சத்தில் இருந்துள்ளார். இதனை பல முறை தன்னுடைய தாயிடமும் கூறியுள்ளார்.

இந்நிலையில் சௌந்தர்யாவின் தந்தை மற்றும் தாய் இருவரும் வழக்கம்போல் என்று வேலைக்கு சென்றனர் இச்சூழலில் மாணவி சௌந்தர்யா வீட்டில் வைத்து மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post