தமிழகத்தில் மீண்டும் 144 தடை அமலுக்கு வருகிறது..?

பெரம்பலூர் நகராட்சி வணிக நிறுவனங்கள் செயல்படும் 7 பகுதிகளில் 144 தடை உத்தரவு செயல்படுவதாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்.

கொரோனா வைரஸ் மூன்றாவது அலை முன்னெச்சரிக்கையாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பெரம்பலூர் நகராட்சி, அரும்பாவூர், லப்பைகுடிகாடு ஆகிய பேரூராட்சிக்கு உட்பட்ட கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மட்டும் குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 பிரிவு 144 இன் இல் நாளை காலை 6 மணி முதல் வருகிற 10ஆம் தேதி மாலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

பெரம்பலூர் நகராட்சியில், சிவன் கோவில் முதல் வானொலி திடல் சந்திப்பு வரை, வானொலி திடல் முதல் பழைய பஸ் நிலையம் வரை, பழைய பஸ் நிலையம் முதல் காமராஜர் வளைவு வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.

பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மார்க்கெட் பகுதி, போஸ்ட் ஆபிஸ் தெரு, கடை வீதி என்.எஸ்.பி. ரோடு பழைய பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.

அரும்பாவூர் பேரூராட்சியில் தழுதாழை சாலை முதல் அரும்பாவூர் பேரூராட்சி அலுவலகம் வரை, பாலக்காடு முதல் அ.மேட்டூர் வரை.

லப்பைகுடிகாடு பேரூராட்சியில், மாட்டு பாலம் முதல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை அடங்கும். மேற்கண்ட பகுதிகளில் கீழ்கண்ட செயல்பாடுகளுக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது.

மருந்தகங்கள், பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்கான செயல்பாடுகள் மட்டுமே உரிய வசதியுடன் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விற்பனை மையங்கள் அனைத்தும் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மட்டுமே 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post