சிறப்பாக வேலை செய்தால் பென்ஸ் கார் பரிசு ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்

ஊழியர்களை எப்போதும் சிறப்பான முறையில் கவனித்துக் கொண்டால் அவர்கள் சிறப்பாக பணிபுரிந்து நம்மை மென்மேலும் உயர்த்துவார்கள். அவ்வாறு செய்யும்போது ஊழியர்களுடன் சேர்ந்து தொழில் நிறுவனங்களும் வளரும். இதுதான் அனைத்து தொழில் நிறுவனங்களின் தாரக மந்திரம்.

அதுபோல ஷிவ் நாடார் உருவாக்கிய ஹெச்.சி.எல் நிறுவனம் எப்போதுமே ஊழியர்களுக்கு நட்பு பாராட்டுவதில் சிறந்த நிறுவனம்.

இப்போது இந்த நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதாவது சிறப்பாக வேலை செய்யும் டாப் கிளாஸ் ஊழியர்களுக்கு மெர்சிடஸ் பென்ஸ் கார் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

ஆனால் இந்த அறிவிப்பை 2013 ஆம் ஆண்டே வெளியிட்டு அதை நடைமுறைப்படுத்தி வந்தது ஹெச்.சி.எல் நிறுவனம் ஆனால் ஒரு கட்டத்தில் இதை கைவிட்டது.

சமீபத்தில் ஷிவ் நாடார் எம்டி பொறுப்பில் இருந்து விலகியுள்ளார் இப்போது அவர் மகள் ரோஷினி நாடார் கைகளுக்கு நிறுவனம் சென்றுள்ளது தற்போது அவர் கார் பரிசு வழங்கும் திட்டத்திற்கு புத்துயிர் ஊட்டியிருக்கிறார்.

இது குறித்து நிறுவனத்தின் மனித வள(HR) பிரிவு தலைவர் விவி.அப்பாராவ் கூறுகையில் ஊழியர்களுக்கான சிறப்பு பரிசு மற்றும் ஊக்கத் தொகை குறித்து முடிவுகளும் திட்டத்தையும் நிர்வாகத்திடம் சமர்ப்பித்துள்ளோம். விரைவில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post