புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு முதல் செமஸ்டர் தேர்வு ரத்து

இந்த கொரோனா காரணமாக பள்ளி கல்லூரிகள் எதுவும் திறக்காமல் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பாடங்கள் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தது.

ஆனால் புதுச்சேரியில் வரும் ஜூலை 26ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த முதலாம் ஆண்டு முதல் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று புதுச்சேரி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்த செமஸ்டருக்கான இண்டர்னல் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என்று புதுச்சேரி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post