ஆர்யா - சாயிஷா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது

ஆர்யா சாயிஷா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது. 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணத்திற்குப் பிறகு சாயிஷா தொடர்ச்சியாக நடித்து வந்தார் சில மாதங்களுக்கு முன்பு சாயிஷா கர்ப்பமானார். இந்நிலையில் ஆர்யா - சாயிஷா தம்பதியினருக்கு நேற்று (ஜூலை 23) இரவு பெண் குழந்தை பிறந்தது.

ஆர்யா மற்றும் சாயிஷா தங்களது ட்விட்டர் பக்கங்களில் அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும் ஆர்யாவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

ஆர்யா மற்றும் சாயிஷா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்து இருப்பதாகவும் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் எனது மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்றே இல்லை என்றும் என்றும் விஷால் தெரிவித்துள்ளார். மேலும் ஆர்யா தற்போது ஒரு பொறுப்புள்ள தந்தையாக மாறிவிட்டார் என்றும் அதற்கு தனது வாழ்த்துக்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் ஆர்யா நடித்த "சார்ப்பாட்டா பரம்பரை" திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது ஆர்யாவுக்கு பெண் குழந்தை பிறந்ததால் இன்னொரு மகிழ்ச்சியும் சேர்ந்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post