நடிகை குஷ்புவின் டுவிட்டர் பக்கத்தை முடக்கியது யார் தகவல் வெளியாகியுள்ளது

நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு கடந்த 20ஆம் தேதி தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபுவை சந்தித்து புகார் ஒன்றை கொடுத்தார்.

அதில் தனது டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டுவிட்டர் நிறுவனத்திடம் புகார் கொடுத்த பிறகும் எந்த பயனும் இல்லை. எனது பக்கத்தை தவறாக யாரும் பயன்படுத்தி விடக்கூடாது. எனது டுவிட்டர் பக்கத்தை முடக்கியது யார் என்று கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகார் மனு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் இருக்கு அனுப்பப்பட்டு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குஷ்புவின் அவரது டுவிட்டர் பக்கத்தை அவருக்கே கொடுக்கவும் அவருடைய டுவிட்டர் பக்கத்தை முடக்கியது யார் என்பது தொடர்பான விபரங்களை தரும்படியும் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் நிறுவனத்திற்கு கடிதத்தை அனுப்பி உள்ளனர்.

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post