மகாராஷ்டிராவில் கனமழையால் நிலச்சரிவில் 36 பேர் பலி

கோடைகாலமும் முடிந்து தற்போது இந்தியாவில் மழைக்காலம் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள ராய்காட் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் சிக்கி சுமார் 36 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 30 பேர் குவியல்களில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்களை மீட்க பேரிடர் மீட்புக் குழுவினர் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம், நிலச்சரிவில் காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post