டோக்கியோ ஒலிம்பிக்கில் தீபிகா குமாரிக்கு டாப் 10 இடம்

டோக்கியோ ஒலிம்பிக் தொடர் இன்று முதல் துவங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. துவக்க நாளான இன்று மகளிர் வில்வித்தை போட்டிக்கான ரேங்கிங் சுற்று நடைபெற்றது.

இதில் மொத்தம் 12 சுற்றுகள் நடைபெற்ற நிலையில் கொரியாவைச் சேர்ந்த ஆன்சன் வீராங்கனை 280 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்து அசத்தினார்.

இதுவரை நடைபெற்ற ஒலிம்பிக் மகளிர் வில்வித்தை போட்டியில் ராக்கிங் சுற்றில் இதுதான் அதிகபட்ச புள்ளிகளாகவும் 25 வருட சாதனையை ஒரே நாளில் முறியடித்துள்ளார் கொரிய வீராங்கனை ஆன்சன்.

இதற்கு முன் 1996 ஆம் ஆண்டில் உக்ரைனின் லீனா ஹெராஷிமென்கா எடுத்திருந்த 673 புள்ளிகள் தான் சாதனையாக இருந்தது.

இந்தியாவைச் சேர்ந்த தீபிகா குமாரி ரேங்கிங் சுற்றில் 663 புள்ளிகள் பெற்று 9வது இடத்தை பிடித்து அசத்தினார். இதே சுற்றில் 616 புள்ளிகள் பெற்று பூட்டானின் கர்மா என்ற வீராங்கனையுடன் அடுத்த சுற்றில் தீபிகா மோத உள்ளார்.

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post