தனி விமானம் மூலம் டெல்லி பறந்த முதலமைச்சர் ஸ்டாலின்

முதலைமச்சர் பதவிக்கு வந்ததும் மு.க.ஸ்டாலின் அனைத்து உதவிகளையும் மக்களுக்காக செய்கின்றார். பதவிக்கு வந்தபின் முதல் முறையாக வெளி மாநிலத்திற்கு பயணம் செய்கின்றார்.

பிரதமர் மோடியை இன்று மாலை 5 மணிக்கு சந்தித்து பல முக்கியமான விஷயங்களை பேச டெல்லிக்கு சென்றுள்ளார் ஸ்டாலின். 

டெல்லிக்கு சென்று முதற்கட்டமாக நிர்மலா சீதாராமன், ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போன்றவர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து காவேரி பிரச்சனை, நீட் தேர்வு பிரச்சனை, கொரோனா தடுப்பூசி இறக்குமதி, ஜிஎஸ்டி விவகாரம் போன்ற பிரச்சனைகளை பிரதமரிடம் பேச உள்ளார்.

இன்று காலை 7:20 மணியளவில் தனி விமானத்தில் டெல்லிக்கு பறந்தார். அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் அவருடன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post