தமிழ் நடிகை காதலருடன் ஹோட்டலில் கைது

தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை நைரா ஷா. இவர் தமிழில் ஸ்ரீகாந்த் நடித்த மிருகா படத்தில் நடித்திருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இவர் மும்பை ஜூஷூ பகுதியில் நட்சத்திர ஹோட்டலில் இவரது பிறந்தநாளை கொண்டாடினார்.

அந்தப் பார்ட்டியில் அவருடைய காதலர் ஆஷிக் சஜித் ஷூசைன் உள்ளிட்ட பலர் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டனர். இரவு நீண்ட நேரம் பார்ட்டி நீடித்துள்ளது.

பின்னர் மற்றவர்கள் சென்றுவிட நைராவும் ஆஷிக்கும் தனி அறைக்கு சென்றுள்ளனர். இதற்கிடையில் பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து போலீஸார் அங்கு செல்ல அதற்குள் மற்றவர்கள் அந்த பார்ட்டியை முடித்துவிட்டு சென்று விட்டனர். போலீசாருக்கு நைரவும் அவரது நண்பரும் மட்டும் அறையில் தங்கியிருந்தது தெரியவந்தது. உடனே அந்த ரூம்க்கு சென்று அவர்களை கைது செய்தனர்.

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post